பிரிவு

உள்ளக கணக்காய்வுப் பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும்

  1. கிளையின் பரிபாலன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

  2. கிளையின் நாளாந்த தபால் தொடர்பான கடமைகள்.

  3. பொருட்பதிவுப் புத்தகம் மற்றும் உரிய ஆவணங்களை நடாத்திச் செல்லல்.

  4. விசாரணைகள் தொடர்பான காலாண்டு அறிக்கை உரிய தினத்துக்கு முன் பிரதம செயலாளருக்கு முனவைத்தல்.

  5. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விடயங்களை ஒழுங்கமைத்தல் மற்றும் குழுவின் தீர்மாணத்தை உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவித்தல்.

  6. கணக்காய்வு வினவல்களுக்கான பதில் கடைத்தமை கிடைக்காமை தொடர்பான அறிக்கைகளை பேணுதல் மற்றும் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை முன்னேற்றத்தை கணக்காய்வாளருக்கு முன்வைத்தல்.

  7. கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அய்வுக்கு தகவல்களை தயாரித்தல்.

  8. வருடாந்த உள்ளக கணக்காய்வு வேலைத்திட்டத்தை தயாரித்தல்.

  9. வருடாந்த உள்ளக கணக்காய்வு வேலைத்திட்டத்துக்கு ஏற்ப கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளக கணக்காய்வு முடிவடைந்ததன் பின் விசாரணை ஒன்றை வழங்குதல்.

  10. கணக்காய்வாளர் வழங்கியுள்ள கணக்காய்வு விசாரணைகளுக்கு பதில் தயாரித்து கணக்காய்வாளருக்கு அனுப்புதல் மற்றும் உரிய கணக்காய்வு விசாரணை ஆவணத்தை இற்றைப் படுத்தி நடாத்திச் செல்லல்.

  11. தென் மாகாண உள்ளக கணக்காய்வுப் பணிப்பாளரால் வழங்கப்படுகின்ற கணக்காய்வு விசாணைகள் தொடர்பாக பதில் தயாரித்து உள்ளக கணக்காய்வுப் பணிப்பாளருக்கு அனுப்புதல் மற்றும் உரிய கணக்காய்வு விசாரணை ஆவணத்தை இற்றைப்படுத்துதல்

  12. கணக்காய்வு விசாரணைகள் உண்டு இல்லை என்பன தொடர்பான அறிக்கைகள் வழங்குதல். (இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, கல்வி இலிகிதர் பணிக் குழு)

  13. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரசூசுகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டு போதிய பாடவேளைகள் வழங்கப்படாத ஆசிரியர்கள் தொடர்பாக உள்ளக கணக்காய்வொன்றை நடத்துதல்.

  14. சகல கடமைகள் தொடர்பாகவும் முன்னேற்ற அறிக்கை ஒன்றை தயாரித்தல்.

  15. பாடசாலை கோட்டக் கல்விக் காரியாலய, மாகாண கால்விக் காரியாலய கணக்காய்வு (கணக்காய்வு திட்டத்திற்கு ஏற்ப)

  16. ஆசிரியர்களது வருடாந்த சம்பள உயர்வு முன்னேற்றத்தினை தயாரித்தல்.

  17. ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறச் செய்தல் நடவடிக்கைகள் தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கை தயாரித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளுக்கு முன்வைத்தல்.

  18. வங்கிக்கூற்றுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஆறு மாதத்திற்கு ஒரு முறை தயாரித்தல்.

  19. கணக்காய்வு விசாரணைகள் , கணக்காய்வுப் பந்திகள் மற்றும் மீளாய்வுக்கான நினைவூட்டல்களை மேற்கொள்ளல்.

  20. ஆசிரியர்களால் தமது பாடத்திட்டங்கள் உரிய விதமாக அதிபர்களுக்கு முன்வைக்கின்றனரா என்பது பற்றி சகல பாடசாலைத் தவணைகளின் ஆரம்பத்திலேயே உள்ளக கணக்காயவுக்கு உட்படுத்துதல்

  21. ஆசிரியர்களால் உரிய முறைப்படி தமது நாட்குறிப்புகளை அதிபருக்கு முனவைத்து, அனுமதி பெற்று, வகுப்பு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா என்பது பற்றி சகல பாடசாலை தவணையிலும் உள்ளக கணக்காய்வுக்கு உட்படுத்துதல்.

  22. வருடாந்த கணக்காய்வாளர் அறிக்கைக்கு பதில் தயாரித்து கணக்காய்வாளருக்கும் மாகாண அரச நிதி விசாரணைக் குழுவுக்கு முன்வைத்தல்.

  23. மாகாண நிதி விசாரணைக் குழு மூலம் வழங்கப்படும் அறிவித்தலுக்கு ஏற்ப மீளாய்வு அறிக்கைகளுக்கு பதில் தயாரித்து கணக்காய்வாளருக்கும் மாகாண மாகாண அரச நிதி விசாரணைக் குழுவுக்கு முன்வைத்தல்.

  24. கணக்காய்வாளர் அறிக்கைக்கு ஏற்ப பாரளுமன்ற அரச நிதி விசாரணைக் குழுவுக்கு உரிய பதிலை தயாரித்து அனுப்புதல்.

  25. பாரளுமன்ற அரச நிதி விசாரணைக் குழுவின் நியமங்களுக்கு ஏற்ப தகவல்களைத் தயாரித்து பிரதம் செயலாளருக்கு முனவைத்தல்.

  26. அடிக்கடி கணக்காய்வு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயங்கள் பற்றி பாடசாலை அமைப்பை அறிவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளல்.

  27. பாசாலை அமைப்பில் காணப்படுகின்ற நிர்வாகக் கணக்கு மற்றும் எனைய பிணக்குகளை குறைத்துக் கொள்ளவதற்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து அறிவுறுத்தல் செயல் திட்டங்களை நடாத்துதல்.

  28. வெளியார்களுக்கான அறிக்கைகளை முன்வைத்தல்.
    I. மாகாண ஆளுனர்
    II. பிரதம செயலாளர்
    III. மாகாண மனுக்கள் விசாரணைக் குழு
    IV. மாகாண நிதி விசாரணைக் குழு
    V. இலஞ்ச ஆணைக்குழு
    VI. நிரல் அமைச்சின் செயலாளர்
    VII. மாகாண கல்விச் செயலாளர்
    VIII. பாரளுமன்ற மனுக்கள் விசாரணைக்குழு
    IX. பாரளுமன்ற நிதி விசாரணைக் குழு
    X. மாகாண ஆலோசனைக் குழு
    XI. பாரளுமன்ற ஆலோசனைக் குழு
    XII. பிரதி கணக்காய்வாளர் / கணக்காய்வாளர் மூலம் முனுவைக்கப்படுகின்ற கணக்காய்வு விசாரணைகளுக்கான மற்றும் கணக்காயவ்வுப் பந்திகளுக்காகன பதில்களை உரிய காலத்தினுள் முன்வைத்தல்.

திணைக்களத்தின் கடமைகளும் பொறுப்புக்களும்
தரவிறக்கம் செய்தல்
அரச விடுமுறைகள் - 2019
மேம்பட்ட நிலை பரிசோதனை முடிவுகள் 2018
கல்வித் தகவல் கோவையை இவ்விடத்தால் பதிவிறக்கவும்.

தென் மாகாண கல்வி திணைக்களம்