உரிய பாடசாலை அதிபர் விண்ணப்பம் ஒன்றை வலய கட்டமைப்புக் கமிட்டியின் பரிந்துறையுடன், வலயக் கல்விப் பணிப்பாளர் மூலமாக மாகாணக் கல்விக் காரியாலயத்துக்கு முன்வைத்தல் வேண்டும்.இதற்காக தேவையான வகுப்பறை, தேவையான மானிட மற்றும் பௌதிக வளங்கள் பாடசாலைக்கு உண்டு என்பதை வலயக் கல்விப் பணிப்பாளர் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலும், வேறுபாடசாலைகளுக்கு இதனால் பாதிப்புக்கள் ஏதும் இல்லை என்றால் மாத்திரமே வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த பரிந்துறையை வழங்கல் வேண்டும்.
அதன் பின்னர் அவ்விண்ணப்பம் மாகாண கட்டமைப்புக் குழுவின் மூலமும் மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய பரிந்துறையை, மாகாணப் பாடசாலையாயின் மாகாணக் கல்விச் செயலாளரின் அனுமதிக்கும், தேசியபாடசாலையாயின் நிரல் அமைச்சின் செயலாளரின் அனுமதிக்காக முன்வைத்தல் வேண்டும். உரிய அனுமதி கிடைத்த பின்னர் விண்ணப்பித்த பாடசாலையில் சமாந்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட முடியும்.